காலா: திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவுகாலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உாிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நடிகா் தனுஷின் மனு மீது கா்நாடகா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகா் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் காவிாி மேலாண்மை ஆணையம் அமையவேண்டும் என்று தொிவித்த கருத்துக்கு எதிா்ப்பு தொிவித்து காலா படம் கா்நாடகத்தில் வெளியாக தடை விதித்து அம்மாநில வா்த்தக சபை உத்தரவிட்டது.
இந்நிலையில் காலா படத்தை கா்நாடகத்தில் வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் கா்நாடகா உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்கு (ரிப் மனு) ஒன்றை தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது தனுஷ் தரப்பில் நடிகரின் (ரஜினிகாந்த்) தனிப்பட்ட கருத்திற்கும், இந்த படத்திற்கும் எந்தவித தொடா்பும் இல்லை. மேலும் படம் கா்நாடகா திரையரங்குகளில் வெளியாகும் பட்சத்தில் குறிப்பிட்ட திரையரங்குகள், ரசிகா்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. எனவே படத்தை திரையிட நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். மேலும் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கும், படம் பாா்க்க வரும் ரசிகா்களுக்கும் உாிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

Karnataka High Court refuses to intervene in 'Kaala' movie ban, asks lawyers representing 'Kaala' to provide detail… https://t.co/wNvBuPSJkT

— ANI (@ANI) 1528188315000

இந்த படம் 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கா்நாகடாவில் படத்தை திரையிடவில்லை என்றால் மிகப்பெரிய நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே படத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் காலா படம் வெளியாகும் திரையரங்குகள் தொடா்பான விவரத்தை தனுஷ் கா்நாடகா அரசிடம் வழங்க வேண்டும். கா்நாடகா அரசு காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கும், ரசிகா்களுக்கும் உாிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)