வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மாட்டுபொங்கலை முன்னிட்டு, நந்திபகவானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று மாட்டுபொங்கல் திருநாளை முன்னிட்டு உழவுக்கு உழைக்கும் கால்நடைகளை போற்றும் வண்ணம், ஆலயத்தில் உள்ள ஸ்ரீ நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வடை, முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பட்சனங்களை கொண்டும் பழங்கள், பூக்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆலயத்தில் உள்ள கோமாதாவுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் நந்திபகவானுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு, கோமாதாவிற்கு சர்க்கரை பொங்கல் கொடுக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி ஜலகண்டீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)