அரிவாளுடன் 30 பகல் கொள்ளையர்களை அடித்து விரட்டிய மக்கள்மதுரையில் பட்டப்பகலில் கிராமத்திற்குள் நுழைந்த கொள்ளையர்களை ஊர்மக்களே அடித்து விரட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திடீரென நுழைந்து தாக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனை அறிந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கொள்ளையர்களை ஓட ஓட விரட்டி திருப்பித் தாக்கினர். வந்தவர்களில் 2 பேர் மட்டும் அவர்களிடம் சிக்கினர். அவர்கள் இருவரையும் கட்டி வைத்து அடித்து உதைத்த தோலை உரித்துவிட்டனர்.
பின், படுகாயமடைந்த அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் முனியாண்டி சுவாமி திருக்கோவில் திருவிழாவுக்கு வந்தவர்கள் என்றும் மது போதையில் ரகளை செய்துவிட்டு கொள்ளையடிக்க ஊருக்குள் கும்பலாக வந்துவிட்டனர் எனவும் தெரிந்தது.
போலீசார் சிக்கிய இருவரையும் கைது செய்து, தப்பி ஓடிய மற்றவர்களையும் பிடிக்க விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)