திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து சமீபத்தில் பலர் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக தகவல் வெளியானது. இதில், அழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மஜித் மகன் அன்வர், அவரது மனைவி நப்சிலா ஆகியோர் சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல் வெளியானது. சிரியாவில் நடந்த அமெரிக்க ராணுவ தாக்குதலில் அன்வர் கொல்லப்பட்டதாக அவரது மனைவி நப்சிலா சமூக வலைதளமான டெலிகிராம் மூலம் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)