ஆலந்தூர்: மூவரசன்பட்டு சபாபதி நகர் நலச்சங்கம் சார்பில் பொங்கல் விழா, கலை பண்பாடு விழா நடந்தது. சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மூவரசன்பட்டு திமுக செயலாளர் ஜி.கே.ரவி, சங்க துணைத்தலைவர் சகாதேவன், இணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாபு வரவேற்றார். இதில், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 80 வயது பூர்த்தி செய்த எஸ்.ராமசாமி-சுசிலா, ஆர்.ஜனார்த்தனன்-மங்கையற்கரசி, கே.பாஸ்கர் -பத்மினி ஆகிய 3 தம்பதியர்களுக்கு சீர்வரிசை வழங்கி பாராட்டினார். பிறகு உறியடி, சிலம்பாட்டம், கிராமிய நடனம், கும்மியாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)