சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமாகா ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான கிருஷ்ணமூர்த்தி இறந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். காமராஜர் மீதுள்ள பற்றால் அரசியலுக்கு வந்து மூப்பனாரை பின்பற்றி அரசியல் பணியாற்றியவர். 1984 முதல் 1988 வரை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராகவும், தமாகா சார்பாக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1998 முதல் 1999 வரை சிறப்பாக பணியாற்றியவர். அவரது இழப்பு, தமாகாவுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)